அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப் போகுது மழை !!  கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !!!

Asianet News Tamil  
Published : Nov 30, 2017, 07:12 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப் போகுது மழை !!  கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !!!

சுருக்கம்

heavy rain in south districts

கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். என்றும் குறிப்பாக தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு அயம் எச்சரித்துள்ளது. 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை ,கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் மட்டுமே பயன்பெற்றன. தென் மாவட்டங்களில் மழை பெய்யாமல் வறட்சி நிலவியது.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கன மழை கொட்டத் தொடங்கியது.

இதே போல் தஞ்சாவூர், திருவாரூர். புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த 36 மணி நேரத்திற்கு  தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கன்னியாகுமரி அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக  தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதோடு, 50 கி.மீ முதல் 65 கி.மீ வரையில் காற்று வீசக்கூடும் என்றும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதனால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. தி.நகர், வடபழனி, நந்தனம், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் நல்ல  மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

வரும் நாட்களில், இந்த குறைந்தழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று நகர்வதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!