3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - ஒருவர் பலி; 50 பேர் படுகாயம்...!

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 10:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - ஒருவர் பலி; 50 பேர் படுகாயம்...!

சுருக்கம்

The car was hit by a car on the truck and the car on the bus. One was killed on the spot.

தேனி அருகே மழை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் சரக்கு வாகனம் மீது பேருந்தும், பேருந்து மீது காரும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் சம்ப இடத்திலேயே பலியானார். 

ஓமலூரை சேர்ந்த ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, அருகே மழை காரணமாக போதிய வெளிச்சம் இன்றி, நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது பேருந்தும், பேருந்து மீது காரும், பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் வந்த 50 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த அனைவரும் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்.. 4.82 கோடி வாக்காளர்கள் தந்த ‘ட்விஸ்ட்’.. எந்த மாவட்டம் டாப்? எது லோயஸ்ட்?
திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி