சென்னையில் பயங்கரம்..! நீதிமன்றம் அருகேயே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்...! 

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 07:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
சென்னையில் பயங்கரம்..! நீதிமன்றம் அருகேயே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்...! 

சுருக்கம்

The police have been searching for the martyrs who have fled and fled the famous Rowdy Vijayakumar in Chennai.

சென்னையில் பிரபல ரவுடி விஜயகுமாரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

சென்னை  வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் விஜயக்குமார். 28 வயதான இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 

காசிமேடு துறைமுக காவல்நிலையத்தில் விஜயக்குமார் மீது 8 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு செய்த குற்ற சம்பவத்திற்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். 

அப்போது மதியத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மதிய உணவு சாப்பிட ரவுடி விஜயக்குமார் நீதிமன்றம் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். 

அவரை நோட்டமிட்டு காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று முத்தியால் பேட்டை பவளக்கார தெருவில் நடந்து சென்றபோது ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். 

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ  காட்சிகள் போலீசாரிடம் கிடைத்துள்ளன. 

இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!