சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை - மக்கள் மகிழ்ச்சி...!

Asianet News Tamil  
Published : Nov 29, 2017, 09:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை - மக்கள் மகிழ்ச்சி...!

சுருக்கம்

People are delighted by the rains in Chennai and suburbs.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று இரவு முதல் டிச., 1ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார். 

இது குறித்து வெளியிட்ட பதிவில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை, அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குமரி லட்சத்தீவு கடல் பகுதியில் அரிய புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் இன்று இரவு டிச., 1ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது சென்னை கே கே நகர், கோடம்பாக்கம், தி நகர், மயிலாப்பூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் அண்ணாசாலை, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
\

PREV
click me!

Recommended Stories

அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!