விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! திமுக வெற்றி! எவ்வளவு வாக்கு வித்தியாசம் தெரியுமா? டெபாசிட் வாங்கியதா பாமக?

By vinoth kumarFirst Published Jul 13, 2024, 2:52 PM IST
Highlights

ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்து வந்தார். 20 சுற்றுகள் முடிவில் அன்னியூர் சிவா 1,23,688 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், பிரதான எதிர்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஆளுங்கட்சியான திமுக சார்பில்  அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

Latest Videos

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சிக்கிய திமுக நிர்வாகிகள்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 20 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்து வந்தார். 20 சுற்றுகள் முடிவில் அன்னியூர் சிவா 1,23,688 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி  56,248 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:  Indian2 Box Office: பாக்ஸ் ஆபிசை மிரட்டியதா இந்தியன் 2! முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 67,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி டெபாசிட்  பெற்றார். நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. 

click me!