- Home
- Gallery
- Indian2 Box Office: பாக்ஸ் ஆபிசை மிரட்டியதா இந்தியன் 2! முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
Indian2 Box Office: பாக்ஸ் ஆபிசை மிரட்டியதா இந்தியன் 2! முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் நேற்று வெளியான இந்தியன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Indian 2
பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பு தான் இந்தியன் 2. இந்த படத்தில் உலக நாயகன் கமல், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாகி உள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு துளியும் ரசிகர்களுக்கு இடையே குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
KamalHassan
இந்த திரைப்படம் உலகெங்கிலும் உள்ள 3000க்கும் மேற்பட்ட திரையரங்கில் நேற்று வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. டிக்கெட் புக்கிங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியன் 2 படத்தின் ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
Indian 2 Movie
ஆனால், இப்படம் வெளியானதில் இருந்து முதல் பாகத்துடன் 'இந்தியன் 2' படத்தை ஒப்பிடும் போது, சுமாராகவே இருப்பதாக கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. சிலர் இப்படத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
Indian 2 box office collection
இந்நிலையில், அட்வான்ஸ் புக்கிங்கில் 20 முதல் 25 கோடி வரை இந்தியன் 2 கலெக்ஷன் செய்திருந்தது. இதனால் முதல் நாள் வசூல் தரமாக இருக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 20 கோடி என சொல்லப்படுகிறது. இந்தியன் 2, முதல் நாளில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.