
சேலத்தில் நேற்று (ஜூலை 21) நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) சார்பாக நடைபெற்ற கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வரவால் பிசுபிசுப்பு நிலையில் முடிந்திருக்கிறது. அரசியல் களத்தில் விஜய் முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்புடன் கூடிய இந்த கூட்டம், பார்வையாளர்களின் வருகையின் பஞ்சத்தால் தான் பேசப்பட ஆரம்பித்துள்ளது.
இக்கூட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகிய புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் மக்கள் தொகை மிகக் குறைவாகவே உள்ளது இருந்தது தெரிய வந்தது. தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பல பகுதிகளில் காலியான நாற்காலிகள் காணப்பட்டதை வைத்து நெட்டிசன்கள் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அதில், சேலத்தில் நேற்றைய நடிகர் விஜய்யின் தவெக கட்சி கூட்டம் பிசுபிசுத்து போயிருக்கிறது. வெறும் காலி நாற்காலிகளுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். நான் கூட ஒரு ஆறு ஏழு சதவீத வாக்குகள் வாங்குவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இதையெல்லாம் பார்த்தால் 2 சதவீதம் கிடைக்க கூட வாய்ப்பில்லை போலிருக்கிறது. சீமானிடமே படுதோல்வியை சந்திப்பார்கள் போல!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பிரமாண்ட பேச்சாளராகக் கருதப்படும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிடம் கூட விஜய் கட்சி தோல்வி அடையும் நிலை ஏற்படும்” என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். விஜய் போன்ற பிரபல நடிகர்கள் அரசியலுக்குள் வருவதைத் தொடர்ந்து, வெற்றி சுலபம் என்ற கணிப்பு பெரும்பாலும் தவறாகவே முடிகிறது. மக்கள் அரசியலை ஆழமாக பார்க்கிறார்கள். வெறும் பெயரும் பிரபலம் மட்டும் போதாது என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சாட்சி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்ணும் நேரமிருக்கிறது. இந்நிலையில், இந்த கூட்ட அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, வியூகம், தரமான அமைப்பு, பிரச்சார வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் தவெக தலைவர் விஜய் மீது உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் போது கன மழை பெய்தது. நீண்ட நேரம் மக்கள் சேரை தலைக்கு வைத்துக்கொண்டு நின்றார்கள். தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் கூட்டம் கலைந்தது. பிறகு மழை நிற்க தேங்காய் மந்திரம் போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.