
சினிமாவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை என்று ஒவ்வொரு மாவட்டமாக பரப்புரை மேற்கொண்டு வரும் விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து விஜய்க்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் எழுப்பினர். குறிப்பாக கரூர் சம்பவத்தை வைத்து திமுக அரசியல் செய்தது. அதன் பின்னர் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அழைத்து பேசி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
55 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக மக்களை சந்தித்த விஜய்:
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முழுக்க முழுக்க சாலை வழி பயணமாக அல்லாமல் காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் குறைகளை தெளிவாக பட்டியலிட்டார். அதில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலமாக பேருந்து நிலையம் இல்லை. அறிஞர் அண்ணா இருந்த போது கட்டிய பேருந்து நிலையமாக கூட இருக்கலாம் என்று விமர்சித்தார். பரந்தூர் விவகாரத்தில் எந்தவித காரணமும் சொல்லி தப்பிக்க முடியாது.
அறிஞர் ஆரன்புத்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை. மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? நடிப்பவர்களையும் நாடகமாடுவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
காஞ்சிபுரத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. முதல் முறையாக பிரச்சாரத்தை ஆரம்பித்தது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் தான். மக்களுக்கு ஆதரவாக திமுக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அப்பவே அப்படி, இவ்வளவு தூரம் நடந்ததற்கு பிறகு சும்மா விடுவோமா என்று ஆவேசமாக பேசினார். ஆரம்பிக்கும் முன்பே அலறினால் எப்படி? திமுக தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விமர்சனம் வைத்தார். விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி? என்று ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார் தவெக தலைவர் விஜய்.
மேலும், தவெகவுக்கு கொள்கை இல்லை என பேசுகிறார்கள். நடிகன், கூத்தாடி என விமர்சனம் செய்கின்றனர். நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்கு விமர்சனம் செய்தால் எப்படி? குறிவைத்தால் தவற மாட்டேன். இல்லாவிடிவில் குறியே வைக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர் வசனம் பேசி இருப்பார். நம்ம குறி எப்போதும் தப்பாது. இனி பிளாஸ்ட்.. பிளாஸ்ட் தான் விஜய்யை ஏன் தொட்டோம் என நினைத்து பீல் பண்ணப் போகிறார்கள்''.
தவெக ஆட்சிக்கு வந்தால் என்ன கண்டிப்பாக வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மை வர வைப்பார்கள். மக்களுக்கான ஆட்சியை மக்களே வர வைப்பாரகள் அல்லவா. அப்படி வரும் போது தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் தெரியுமா, எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் இருக்க வேண்டும்.
காரும் தான் லட்சியம்: விஜய் தேர்தல் வாக்குறுதி
காரும் தான் லட்சியம். அதற்கான வளர்ச்சிக்கு பொருளாதார வசதிக்கு வழி வகை செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்கள் குறைந்தது டிகிரி படித்திருக்க வேண்டும். குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு கல்வியில், பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனைக்கு மக்கள் அனைவரும் பயம் இல்லாமல் செல்ல வேண்டும், பருவழையால் ஏற்படும் மாற்றத்தால் மக்களும், ஊரும், விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும். அதற்கு ரூ.4000 திட்டம் என்று சொன்னார்களே அந்த மாதிரி இல்லாமல் முழுமையான பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.