
தவெக தலைவர் விஜய் சுமார் 55 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூயில் இன்று மக்களை சந்தித்தார். விவசாயிகள், நெசவாளர்கள் என சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் தவெகவை கொள்கையற்ற கூட்டம் என விமர்சித்து வருகின்றனர்.
ஆவேசமாக பேசிய விஜய்
அதாவது இன்று ஆவேசமாக பேசிய விஜய், ''கொள்கையா? அது என்ன விலை என்று கேட்குல் அளவுக்கு ஒரு கட்சியை நடத்தும் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தவெகவுக்கு கொள்கை ஏதும் கிடையாது சொல்கிறார். பிறப்பெக்கும் எல்லா உயிருக்கும் என அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும். சமூக நீதி கிடைக்கணும். அதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று சொகல்கிற நமக்கு கொள்கை இல்லையா?
நமக்கு கொள்கை இல்லையா?
கட்சி ஆரம்பித்ததற்கு குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா? வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற நமக்கு கொள்கை இல்லையா? நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெவித்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என சொன்னது மட்டுமின்றி அதுக்கு ஒரு இடைக்கால தீர்வு சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக போராடி, சமத்துவம், சமவாய்ப்பு என உறுதியாக சொல்லும் நமக்கு கொள்கை இல்லையா?
நீ பாசாங்கு காட்டாதே பாப்பா
இப்படி கொள்கையை வெறும் பேச்சில் மட்டும் பேசி விட்டு எல்லா கொள்கையையும் அன்டர்கிரவுன்டில் அடகு வைத்து விட்டு ஏதோ இவங்களுக்கு மட்டும் தான் எல்லை கொள்கையையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி. இவங்க கொள்கையே கொள்கை தானே. இதெல்லாம் மக்களுக்கு தெரியாதா? பாப்பா.. பவள விழா பாப்பா நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. பாப்பா என்று நாங்கள் பாசத்துடன் சொன்னதை நீங்கள் விமர்சனம் என்று எடுத்துக் கொண்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்'' என்றார்.