
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய் பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.