VCK: ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. குஷியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி.. 25 ஆண்டுகால கனவு நினைவானது!

By vinoth kumarFirst Published Jun 5, 2024, 12:05 PM IST
Highlights

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் பானை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்றதன் மூலம்  25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் பானை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். 

Latest Videos

இதையும் படிங்க: Seeman: அசத்திய சீமான்..8.9 % வாக்குகள் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை தட்டி பறித்த நாம் தமிழர் கட்சி

இரண்டு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. மாநில கட்சி அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள் என்னெவென்றால்  சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் அல்லது மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் அல்லது மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

இதையும் படிங்க: திருவள்ளூர் தொகுதியில் வரலாற்றுச் சாதனை வெற்றி படைத்த காங்கிரஸ் வேட்பாளர்! யார் இந்த சசிகாந்த் செந்தில்?

அந்த வகையில், தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளதை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 2019ம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!