செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎப் வாசன் தனது செல்போனை இன்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கடந்த மாதம் 15ம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் மதுரை மாவட்டம் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே காரில் செல்போன் பேசியபடி கவனக் குறைவாக காரை ஒட்டியதாக அண்ணாநகர் காவல்துறையினர் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
undefined
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6வது நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டிடிஎப் வாசன் மன்னிப்பு கோரியதால், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி
இந்நிலையில் டிடிஎப் வாசன் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக மதுரை அண்ணாநகர் காவல்துறை நோட்டீஸ் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3ம் தேதி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறையிடம் 2 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். இந்த நிலையில் இன்று தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் ஒப்படைத்தார்.