MP Venkatesan: 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி - மகிழ்ச்சி பெருக்கில் எம்.பி.வெங்சடேசன்

By Velmurugan s  |  First Published Jun 4, 2024, 12:28 PM IST

மதுரையில் இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 8 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 சுற்று முடிவுகளிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற சிபிஐ வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சு.வெங்கடேன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Durai Vaiko: மக்களே எஜமானர்கள்; வெற்றி முகத்தில் துரைவைகோ பேட்டி

Tap to resize

Latest Videos

undefined

இது தொடர்பாக எம்.பி.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முதல் சுற்றிலேயே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றேன். இதே சதவீதம் தான் தொடர்ந்து வருகிறது. இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம். 

Thirumavalavan: சிதம்பரம் தொகுதியில் திருமா தொடர்ந்து முன்னிலை; தொண்டர்கள் உற்சாகம்

வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மோடியின் மீடியாக்கள் சொன்ன உண்மையை இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தற்போது வந்து கொண்டிருக்கிற செய்தி என்றார். தற்போதைய நிலவரப்படி வெங்கடேசன் 1,85,202 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 91,210 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

click me!