TTF Vasan : மதுரை முன்னாள் ரவுடி... வரிசூர் செல்வத்துடன் டிடிஎஃப் வாசன் திடீர் சந்திப்பு - காரணம் என்ன?

By Ganesh A  |  First Published Jun 2, 2024, 12:08 PM IST

மதுரையில் சாலை விதிமீறல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டிடிஎப் வாசன், தற்போது முன்னாள் ரவுடி வரிசூர் செல்வத்துடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.


சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக டிடிஎஃப் வாசன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த வாசன் கையெழுத்திட்டார். 

காவல் நிலையம் அருகே சிறார்கள் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்த நிலையில், மதுரை சிவகங்கை சாலையில் உள்ள முன்னாள் ரவுடி வரிசூர் செல்வத்துடன் டிடிஎப் வாசன் சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜோடியாக விசிட் அடித்த ஆதி - நிக்கி கல்ராணி

குறிப்பாக வரிசூர் செல்வத்தின் வீட்டில் சோபாவில் அமர்ந்தவாறு வீட்டிற்கு வந்த விருந்தாளியான டிடிஎஃப் வாசன் தேங்காய் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உண்ணக்கூடிய ஒரு பொருளை வரிச்சூர் செல்வம் கொடுத்த நிலையில், முழுவதுமாக தேங்காய் எண்ணெயில் பொறிக்கப்பட்டிருக்கிறது நன்றாக இருக்கிறது என்று கூறிய நிலையில் உங்களது வாழ்க்கையில் கடந்து வந்ததை பற்றியும் தங்களுக்கான அறிவுரை தனக்கு என்ன என்று வாசன் கேட்பதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது

2 K கிட்ஸ் ஆன வாசனுக்கு 70 ஸ் கிட்ஸ் ஆன வருசூர் செல்வம் ஆதரவு கொடுக்கிறாரா? இல்லை, மதுரையில் தங்கி ஒவ்வொரு நாளும் கையெழுத்திடவேண்டிய நிலையில் எதார்த்தமாக அவரை சந்திக்க வாசன் சென்றாரா ? என்ற கேள்வி ஒருபுறம் எழுந்து இருந்தாலும் எங்கு சென்றாலும் எது நடந்தாலும் தனது youtube தளத்தில் பதிவேற்றம் செய்யும் வாசன், இன்னும் எட்டு நாட்களுக்குள் யாரை சந்திக்கப் போகிறார் யாருடன் ஆன வீடியோவை பதிவேற்றம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் அவரது பாலோயர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் இருவருக்கும் பிறந்தநாள்! டபுள் சந்தோஷத்தில் கமல் சொன்ன வாழ்த்து

click me!