யாரோ ஒருவரின் கட்டளையின் படி கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன - அமைச்சர் அதிருப்தி

By Velmurugan sFirst Published Jun 3, 2024, 4:24 PM IST
Highlights

யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும் என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து திமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இனிப்புகளை வழங்கினார். 

நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில், அதன் முடிவுகளை கருத்து கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல. 5 அல்லது 6 கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் நடக்காத வகையில் மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 

Latest Videos

கட்சியவே கலைச்சிட்டேன் என் மனைவி எப்படியாவது எம்.பி. ஆயிடனும்; கையில் வேப்பிலையுடன் சரத்குமார் அங்கபிரதட்சணம்

கருத்துக் கணிப்புகள் எடுத்த நிறுவனங்கள் அச்சடித்தது போல ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அறிவு சார்ந்த மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகள் நம்ப முடியாத வகையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை. ஒரு மாநிலத்தில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அனைத்து ரேசன் கடைகளிலும் 2 மாதங்களுக்கான பருப்பு, பாமாயிலை வழங்குங்கள் - அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அதேபோல ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும், கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும். நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொருத்திருந்து பார்ப்போம் என கூறினார்.

click me!