குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடித்த கரடி.. வெளியான பரபரப்பு CCTV காட்சிகள்!

Published : Sep 19, 2022, 03:12 PM IST
குன்னூர் அருகே குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடித்த கரடி.. வெளியான பரபரப்பு CCTV காட்சிகள்!

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புகளின் அருகே கரடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி நள்ளிரவு கிராத்தில் உலா வந்து குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால்வாக்கினத்தின் மீது ஏறி பால் பொருட்களை சூறையாடி சென்றது.

மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

அதேபோல் மீண்டும்  குடியிருப்பின் அருகே இரவு உலா வந்த கரடி வீட்டின் நுழைவாயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வாகனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பால் பொருட்களை எடுத்துகுடிக்க  முயற்சித்து.

இக்காட்சியானது குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை ஆய்வு செய்த பார்த்த குடியிருப்பு வாசிகள் பெரும் பீதி அடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

இதனைத் தொடர்ந்து கிராம பகுதிக்குள் குடியிருப்புகளின் அருகே உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!