10% ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்.! எஸ்.ஆர்.எம்.யூ எதிர்ப்பு... மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்

By Ajmal Khan  |  First Published Sep 19, 2022, 2:52 PM IST

30 வருட பணி நிறைவு என்ற அடிப்படையில் ரயில்வே ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி பொன்மலையில் எஸ்.ஆர்.எம்ழயூ சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.


ரயில்வேயில் ஆட்குறைப்பு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், ரயில்வே கட்டண உயர்வை கைவிட்டு,  பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.  எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

கருணாநிதிக்கு மானாட மயிலாட இல்லையென்றால் தூக்கம் வராது..! ஸ்டாலினுக்கு மாநாடு இல்லைனா வராது- ஆர்.பி உதயகுமார்

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை 10 சதவிகிதமாக குறைத்து 3 வருடத்தில் பணி நீக்கம் செய்ய திட்டமிடப்படுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 50வயது அல்லது 30வருட பணி நிறைவு என்ற அடிப்படையிலும் தொழிலாளிகளையும் அதிகாரிகளையும் பணியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும்  ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், எனவும் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு  மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படியுங்கள்

கருணாநிதிக்கு மானாட மயிலாட இல்லையென்றால் தூக்கம் வராது..! ஸ்டாலினுக்கு மாநாடு இல்லைனா வராது- ஆர்.பி உதயகுமார்


 

click me!