"காந்தி புத்தரின் கருத்துக்களை பரப்பியவர் அப்துல்கலாம்" - வெங்கையா புகழாரம்!

First Published Jul 27, 2017, 1:06 PM IST
Highlights
venkaiah naidu praising abdul kalam


மிகச்சிறந்த மனிதரான அப்துல்கலாமை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், காந்தி புத்தரின் கருத்துக்களை பரப்பியவர் அப்துல்கலாம் எனவும் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, இந்தியாவின் அக்னியாக திகழ்பவர் அப்துல் கலாம் எனவும், அவர் அக்னி சிறகுகளை நம்மிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

மிகச்சிறந்த மனிதரான அப்துல்கலாமை நினைவுகூர்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், காந்தி புத்தரின் கருத்துக்களை பரப்பியவர் அப்துல்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

மண்ணின் மைந்தனான அப்துல் கலாமின் சேவ மறக்க முடியாது எனவும்,  அவரது கருத்துக்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசாக அனைத்து துறைகளிலும் அப்துல்கலாம் ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எனவும், நாட்டை மேம்படுத்தி வளர்ச்சி பாதையில் வழி நட்த்துவதே கலாமுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி எனவும் குறிப்பிட்டார்.  

அப்துல் கலாமின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாகவும், ராமேஷ்வரத்தில் உள்ள கலாம் மணிமண்டபத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தருவார்கள் எனவும், வெங்கையா தெரிவித்தார்.

எளிமையாக வாழ்ந்து உயரத்தை அடைந்த மனிதர் அப்துல்கலாம் எனவும் இளைஞர்களை கனவு காணுங்கள் என ஊக்குவித்தவர் அப்துல்கலாம் எனவும் புகழாரம் சூட்டினார் அப்துல்கலாம்.  

click me!