கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

By Ajmal Khan  |  First Published Jul 18, 2022, 1:30 PM IST

 கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன்கள்  பள்ளி விடுதியில் தங்கி இருக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் குற்றம் சாட்டினார்


மாணவி உடலில் நக கீரல்கள்

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நடைபெறுகின்ற இந்தியாவுக்கான முதல் குடிமகன் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரித்து எனது வாக்கினை செலுத்தி உள்ளதாக கூறினார். கள்ள குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி இறப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  பிரேத பரிசோதனையில் உடல் முழுவதும் நக கீரல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாணவி மரணம் தொடர்பாக நேற்றைய தினம் வரையில் மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் விசாரிக்கவில்லையென தெரிவித்தார். இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி ஏன் விசாரிக்கவில்லையென்றும் கேள்வி எழுப்பியவர், மாணவி இறப்பு நிகழ்வதற்கு முன்பு விடுதி மானவர்களை வெளியேற்றியது ஏன் என்றும்  இறப்பு நிகழ்விற்கு முன்னதாகவே ஆசிரியர்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது ஏன் எனவும் வினாவினார். 

Tap to resize

Latest Videos

Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

மாணவிக்கு பாலியல் தொல்லையா?

அரசு உயர் அதிகாரிகளின் மெத்தன போக்குத்தான் கலவர சம்பவத்துக்கு காரணம் என கூறியவர், சிபிசிஐடி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டது வரவேற்க்க தக்கது என தெரிவித்தார்., மாணவி உடல் மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்க தக்கது எனவும் தெரிவித்தார். பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டரா என்கிற கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், அந்த பள்ளி தாளாளர் மகன்கள் இரண்டு பேர் அந்த பள்ளி விடுதியில் தங்கி இருக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அந்த பள்ளியில் இதுவரை ஆறு மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் இரவு நேரத்தில் தாளாளர் மகன் பள்ளி வளாகத்தில் நடமாடக்கூடிய வீடியோ வெளியாகி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்...! பள்ளியை சூறையாடிய இரண்டு முக்கிய அமைப்பின் நிர்வாகிகள் கைது

பள்ளியை அரசுடமையாக்க வேண்டும்

உயிரிழந்த ஸ்ரீ மதி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாயும், அவரது தாய்க்கு அரசு வேலையும் அளிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார். இது போன்ற பள்ளிகளை  அரசு உடைமையாக்க வேண்டும் என கூறினார். முறையாக விசாரித்து குற்ற இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவி மர்ம மரணம்.. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்.. முதலமைச்சர் உறுதி


 

click me!