பள்ளி மாணவி மர்ம மரணம்.. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்.. முதலமைச்சர் உறுதி

By Thanalakshmi V  |  First Published Jul 18, 2022, 1:11 PM IST

கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக நினைத்து அவர்களை பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு மாறாக நடக்கும் எந்தவொரு செயல்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
 


தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அதில், தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது சாதாரணமாக நடந்துவிடவில்லை. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போல் இதுவும் சென்னை பிரதேசம் என்று அடையாளமற்ற மாநிலமாக தான் இருந்திருக்கும் என்பதை மறுந்துவிட வேண்டாம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே பல ஆண்டு காலம் போராடவும் வாதடவும் வேண்டியிருந்தது. திராவிடம் என்ன செய்தது என்று பேசிபவர்கள் இதனை அறியவேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் அமர்ந்ததால் தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிந்தது. பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற தகுதி பெற்று தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை என்று அவர் குறிப்பிட்டார். நாம் எது சொன்னாலும் ஆய்வு பூர்வமாக தான் சொல்கிறோம். சிலர் போல கற்பனையாக சொல்லவில்லை. கி.பி 6 ஆம் நூற்றாண்டிலே நகரமயமாக இருந்தது என்பதற்கு கீழடியே ஆதாரம். எனவே அத்தகைய பெருமை கொண்ட தமிழினம் வாந்த நிலப்பரப்பிற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்வதற்கு, நாம் போராட வேண்டியிருந்தது என்பது அவமானம் என்று அவர் பேசினார். ஆனால் அந்த அவமானம் துடைத்து எறியப்பட்ட நாள் தான் இந்நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய உத்தரவு .. தந்தை உடனிருக்க நீதிமன்றம் அனுமதி

மேலும் தமிழ் இனம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இனம் என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதன் மூலம், தாழ்ந்து கிடந்த தமிழகம் தலைநிமிர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். உலகில் முதல் பிறந்த குரங்கு தமிழ் குரங்கு தான் என்று முதலமைச்சர் கூறினார். தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சியை ஊட்டிய இயக்கும் திமுக தான் என்று அவர் கூறினார். தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல. ரத்தமும் சதையும் கொண்ட உரிமை போராட்டம் என்று பேசினார்.

திமுக ஆட்சியில் தான் தெற்கு சிறக்கிறது என்று பெருமையை தேடித்தந்துள்ளோம். இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6% ஆக உள்ளது என்று முதலமைச்சர் பெருமையாக கூறினார்.  மாநில சுயாட்சி மூலம் தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டினை நிலைநாட்ட முடியும். மேலும் மொழி, மதம், இனம் அடிப்படையில் அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதன் மூலம் தான் இந்தியாவின் ஒற்றுமையை பேணிகாக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார். 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது.. டிசியை எரித்தது ஏன்..? சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி

தொடர்ந்து பேசிய அவர் , கள்ளக்குறிச்சி சம்பவங்கள் மன வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக நினைத்து அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.  மாறாக நடக்கும் எந்த செயல்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார். இந்த சோகமான சூழலை பயன்படுத்தி சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்துக்கொண்டுள்ளார்கள். வன்முறை என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர வேண்டும். அமைதியான தமிழகம் தான் அனைவருக்குமான தமிழகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் கூறினார்.

நம்முடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நமக்கு இருக்கும் மொழிபற்றும், இனபற்றும், மாநில சுயாட்சி கொள்கையும் தான். தமிழ் மொழிப்பற்றையும் தமிழின உரிமை வேட்கையும் மாநில சுயாட்சி தத்துவத்தையும் எந்த சூழ்நிலையிலும் யாருக்காவும் விட்டுதந்துவிட கூடாது என்று அவர் வலியுறுத்தினார். தமிழ் என்று சொல்லுவதால் நாம் மற்ற இனத்தவருக்கு எதிரிகள் கிடையாது என்றும் மாநில சுயாட்சி என்று பேசுவதால் அது தேசிய ஒருமைபாட்டிற்கு குந்தகை ஏற்படுத்துவது கிடையாது என்றும் அவர் விளக்கினார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்...! பள்ளியை சூறையாடிய இரண்டு முக்கிய அமைப்பின் நிர்வாகிகள் கைது

click me!