கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்...! பள்ளியை சூறையாடிய இரண்டு முக்கிய அமைப்பின் நிர்வாகிகள் கைது

Published : Jul 18, 2022, 12:29 PM IST
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்...! பள்ளியை சூறையாடிய இரண்டு முக்கிய அமைப்பின் நிர்வாகிகள் கைது

சுருக்கம்

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மக்கள் அதிகாரம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஶ்ரீமதி,பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குத்தித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையாடுத்த மாணவியின் மரணத்தில் மர்ம்ம் உள்ளதாக கூறி மாணவியின் பெற்றார் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து நேற்று அந்த பள்ளியை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்ஸ் அப் குழு மூலம் மாணவியின் மரணம் தொடர்பாக தகவலை பரப்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று பள்ளியை முற்றுகையிட்டவர்கள் பள்ளிக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், மேஜைகள், நாற்காலிகளை தீயிட்டு எரித்துள்ளனர். மேலும் 4 ஆயிரம் மாணவர்களின் டிசியையும் வெளியில் தூக்கி வீசியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையா?குழப்பத்தில் மாணவர்கள்,பெற்றோர்கள்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்...! தனியார் பள்ளி ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

முக்கிய அமைப்பு நிர்வாகி கைது

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும்  தந்தை பெரியார் திராவிட கழக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக தற்போது வரை கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கச்சராபாளையம், சேலம் மாவட்டம் ஆத்தூர், கடலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதே போல பள்ளி நிர்வாகத்தில் இருந்து  நேற்று பள்ளி தாளாளர் குமார்,செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்தநிலையில் இன்று  வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய இருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!