திடீர் அதிர்ச்சி..பிரபல மருத்துவமனையில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு.. நோயாளிகள் வருவதற்கு கட்டுபாடு விதிப்பு.

By Thanalakshmi VFirst Published Jan 9, 2022, 7:57 PM IST
Highlights

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில்  மருத்துவர்கள், பணியாளர்கள் என 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இருந்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில்  மருத்துவர்கள், பணியாளர்கள் என 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இருந்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பிரபல சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சையாக  பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக  வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதன் காரணமாக    வேலூர் சிஎம்சி மருத்துவமனையில்  மருத்துவர்கள், பணியாளர்கள் என 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் சிஎம்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், புறநோயாளிகள் பிரிவில் தவிர்க்க முடியாத  பாதிப்புகளுடன் வருபவர்கள் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகின்றனர். இதனால் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இருந்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் அறுவை சிகிச்சைகளும் கட்டுபடுத்தப்பட்டுள்ளதால் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில், சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என சுமார் 10,500 பேர் பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்   மருத்துவர்கள், பணியாளர்கள் என 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுலா வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தவிர, வெளி மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மேலும் இரவு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இக்கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பின்னர் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!