
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வெள்ளக்கோவில் நகராட்சி தேர்தலில் உறுப்பினர் பதவிகளுக்கும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கும் வரப் போவது யார்..? எந்தக் கட்சி இங்கு வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக உள்ள முக்கிய புள்ளிகள் பின்வாங்கி உள்ளதால், தலைவர் வேட்பாளர் யார் என இதுவரை தெரியவில்லை. இந்த நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் மொத்தம் 37,152 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 42 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக கிராமங்களை உள்ளடக்கிய நகராட்சி என்பதால் அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்தாலே போதும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அமைச்சர் சாமிநாதனின் சொந்த ஊரான முத்தூர் பேரூராட்சியில் அதிமுக மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெள்ளக்கோவில் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வெள்ளக்கோவில் நகராட்சியில் 15 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.