சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய விஜயகுமார் ராஜினாமா! பின்னணி காரணம் இதுவா?

By Raghupati RFirst Published Oct 15, 2022, 9:57 PM IST
Highlights

உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்:

தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜயகுமார் 1975 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பிறகு தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றினார். மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். 1991 ஆம்  ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

சந்தனக் கடத்தல் வீரப்பன்:

2001 ஆம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆனார். 2003 ஆம் ஆண்டு சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட கமாண்டோ படையின் தலைவர் ஆனார். 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய ஆயுதப்படை போலீசில் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது, திடீரென ஓய்வுபெற்றார்.

மத்திய அரசு பணி:

பிறகு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அடுத்ததாக மத்திய உள்துறைக்கு பணிக்கு சென்றார். பிறகு 6 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பில் பணியாற்றிய கே.விஜயகுமார், கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அதற்கு அடுத்து, பிரிக்கப்படாத ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

விஜயகுமார் ராஜினாமா:

அதன்பின், கடந்த 2019 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை கே.விஜயகுமார் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

click me!