ஐபிஎஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு! யார் யார் தெரியுமா?

By Raghupati RFirst Published Oct 15, 2022, 7:02 PM IST
Highlights

தமிழகத்தில் ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாக மாதவன், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக அசோக் குமார், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மதிவாணன், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாக புக்யா சினேகா பிரியா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6 ஆவது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக பாஸ்கரன், விளாத்திகுளம் உதவி எஸ்பியாக ஸ்ரேயா குப்தா பணியிடமாற்றம் செய்யயப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சப்-டிவிஷன் காவல் துணைக் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அய்மன் ஜமால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் டிவிஷன் காவல் துணைக் கண்காணிப்பாளராக பிருந்தா, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் துணைப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

மேலும், உதவிக் காவல் கண்காணிப்பாளராக யாதவ் கிரிஷ் அஷாக், திருவள்ளூர் மாவட்டம், துணைப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக விவேகானந்தர் சுக்லா, துணைக் காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் துணைப் பிரிவு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பல்வீர் சிங் உள்ளிட்டோரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

இதையும் படிங்க..பள்ளி காதல்..பிரேக்அப் செஞ்சா! படுகொலை செய்யப்பட்ட சத்யா - சதீஷ் குடும்பத்தின் மறுபக்கம்

click me!