“தம்பி திருமாவை விட்டு விடாதீர்கள்.. உருகிய நெல்லை கண்ணன்” - நெகிழ்ந்த திருமாவளவன் !

By Raghupati RFirst Published Aug 20, 2022, 5:48 PM IST
Highlights

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார் நெல்லை கண்ணன்.

கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மை கொண்ட பேச்சாளர். வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் நெல்லை கண்ணன் என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். 

அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?

அப்போது பேசிய அவர், 'எல்லா நல்லவர்களையும் பார்த்தாச்சு, காமராஜரைப் போல்  முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின், அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்.  ஒரு நல்ல முதலமைச்சர், நிறைய முயற்சி செய்கிறார்.  அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகத்தின் குழந்தைகள் ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற ஒரு ஆணையை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள். 

குழந்தைகள் நமது எதிர்கால செல்வங்கள். அவர்களை இந்தப் பள்ளி கூடங்கள் முளையிலேயே கருக்கிவிடும். அதுபோல புத்தக கண்காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான், புத்தகம் என்பதே வடமொழி, இதனை படைப்பாளிகளின் சங்கமம் என அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என்று முதல்வர் ஸ்டாலினை பற்றி புகழ்ந்து பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து திருமாவளவனை பற்றி பேசிய அவர், ‘இத்தனை ஆண்டும் என்னைப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் எல்லாம் என்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவமதித்தனர். என்னை மனிதனாக மதித்து, எனக்கு மரியாதை செய்யும் தம்பி திருமா மடியில் மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி அடைவேன். திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. இனி, இறுதி மூச்சுவரை திருமாவே என் பாதுகாவலன்’ என்று பேசினார்.

‘தம்பி திருமாவளவனை விட்டு விடாதீர்கள்; அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு என் மீது அவர் பாசம் கொண்டிருந்தார் என்பதை விட நம்பிக்கை வைத்திருந்தார் என்பதையே உணர்ந்தேன்’ என்று நெல்லை கண்ணன் மறைவுக்கு திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலும் இருவருக்கிடையே உள்ள பாசத்தை புரிந்து கொள்ளலாம். இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

click me!