அதிர்ச்சியில் மக்கள் !! ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி.. கூட்டுறவு சங்க தலைவர் பதவி ரத்து..

By Thanalakshmi V  |  First Published Aug 20, 2022, 3:55 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி என்பவர் தலைவராக உள்ளனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளனர். 
 


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்ட செயலாளர் குமுதவள்ளி என்பவர் தலைவராக உள்ளனர். இதில் 11 பேர் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த 2019- 22 ஆம் ஆண்டு ஆரணிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில், தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.

மேலும் படிக்க:மாணவர்கள் வேலையெல்லாம் செய்யக்கூடாது.. வேணுமென்றால் பணியாளர்களை போடுங்கள்.. காட்டமான உத்தரவு

Tap to resize

Latest Videos

இதனையடுத்து சென்னை ஆவின் நிறுவனம் அந்த பாலை தரமற்றதாக குறிப்பிட்டு திரும்பி அனுப்பியது. மேலும் இது தொடர்பாக குறிப்பிட்ட அந்த பால் கூட்டுறவு சங்கத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பால் விற்பனை,கொள்முதல் ஆகியவற்றில் சங்க தலைவர் குமுதவள்ளி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக சங்கத்தின் உறுப்பினர்கள் முதலமைச்சர் தனிபிரிவு, மாவட்ட நிர்வாகம் உள்ளிடவற்றிற்கு புகார் மனு கொடுத்தனர். 

இது தொடர்பாக சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின் பேரில் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பால் கொள்முதலில் மோசடி, நிர்வாகத்தில் பணம் கையாடல், பாலில் தண்ணீர் கலப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.  இதனையடுத்து சென்னை ஆவின் கூடுதல் ஆணையர் ஆரணி பால் கூட்டுறவு சங்க பெண் தலைவர் குமுதவள்ளியின் பதவியை ரத்து செய்துள்ளார். 

மேலும் படிக்க:துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கடிதம்..
 

click me!