உங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறோம்..! கோவை பெண் காவலரை பாராட்டி சத்குரு ட்வீட்

Published : Aug 20, 2022, 02:30 PM IST
உங்கள் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறோம்..! கோவை பெண் காவலரை பாராட்டி சத்குரு ட்வீட்

சுருக்கம்

கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல ஆண்டுகளாக செய்துவரும் நிலையில், அவர்களை சத்குரு பாராட்டியுள்ளார்.  

கோவை மாவட்டத்தின் இரண்டு பெண் காவலர்கள் சாலையோரங்களில் கிடக்கும் ஆதரவற்றோரின் இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்யும் சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக, சத்குரு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரவீனாவுக்கும் அமீனாவுக்கும் வணக்கம், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளின் பிடியில் இறப்போருக்கு கண்ணியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் உங்களது கருணைமிக்க அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறோம். உங்கள் மனிதநேயத்தின் நெகிழ்ச்சியூட்டும் வெளிப்பாடு இது  என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க - ஈஷா சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் வழங்கல்..!

பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் பிரவீனா அவர்கள் கடந்த 7 வருடங்களாகவும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அமீனா என்கிற பெண் காவலர் கடந்த 4 வருடங்களாகவும், ஜீவ சாந்தி ட்ரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உடல்களை அடக்கம் செய்யும் சேவையை செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க - பஞ்சத்தில் தவித்த பாரதம் இன்று உலகிற்கேஉணவளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது!சுதந்திர தினவிழாவில் சத்குரு பெருமிதம்

கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட பாதுகாப்பு கவசம் அணிந்து உடல்களை அடக்கம் செய்ததாக அவர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?