துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கடிதம்..

By Thanalakshmi V  |  First Published Aug 20, 2022, 2:58 PM IST

பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி இது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.
 


பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து வருகிறது. 

தேடல் மற்றும் தேர்வுக் குழுவினால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பத்தவர்களில் இருந்து  கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 பேரை தேர்வு செய்வர். இந்த குழுவில் பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர்,  ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இடம் பெற்றிருப்பர். தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும்  3 பேர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தில் அதில் ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமிப்பார். 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:முதல்வர் ஸ்டாலினே அசர போகும் அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்ய போகும் தரமான சம்பவம்.. அலறும் அதிமுக.!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி சட்டப்பேரவையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாக்களில், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக விளக்கமளித்தார். இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க:இதையே ஒரு இந்து சேர்ந்திருந்தா சும்மா விட்டுருப்பீங்களா.. திமுக அரசை சீண்டும் கிருஷ்ணசாமி..!

அதில் 'துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது என்றும் அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து விளக்கம் அளிக்க கோரி தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

click me!