18 மணி நேரம் வேலை.. முதுகில் கம்பியை சொருகியது போல் வலி - வேதனையை கொட்டிய திருமா

Published : Dec 01, 2025, 11:19 AM IST
thirumavalavan

சுருக்கம்

ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் வேலை செய்வதால் முட்டு வலி, கால் வலி ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் கம்பியை சொருகியது போல் வலி ஏற்படுவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாயின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கட்சிக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமும் 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்துகொண்டிருக்கிறேன். கண்களில் கட்டி ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆண்டி பயாடிக் மருந்தை போட்டுக் கொண்டு தொடர்ந்து பணி செய்கிறேன். தொடர் பணி காரணமாக முட்டி மற்றும் கால்களில் வலி அதிகரித்துள்ளது.

இருக்கையில் அமர்ந்தால் முதுகெலும்பு முதுகெலும்பாக இல்லை. கழுத்தில் இருந்து இடுப்பு வரை ஒரு இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் வலி ஏற்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து கட்சி பணிகளை செய்து வருகிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்