பல்வேறு புகார் எதிரொலி... புழல் சிறையில் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அதிரடி ஆய்வு!

Published : Sep 13, 2018, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 09:24 AM IST
பல்வேறு புகார் எதிரொலி... புழல் சிறையில் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா அதிரடி ஆய்வு!

சுருக்கம்

புழல் சிறையில், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்து கொடுத்தது யார் யார்? இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக சிறைத்துறை அதிகாரி அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.

புழல் சிறையில், கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்து கொடுத்தது யார் யார்? இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக சிறைத்துறை அதிகாரி அசுதோஷ் சுக்லா கூறியுள்ளார்.  சென்னை புழல் சிறைக்குள் வெளியில் இருந்து போதை பொருட்கள், லக்சுரி பொருட்கள், காசு கொடுக்கப்பட்டால் சிறை கைதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன் சிறை துறை அதிகாரி ஒருவர், கஞ்சா போதை பொருள் எடுத்து சென்று மாட்டிக் கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிறை கைதியாக இருக்கும் பெரும் புள்ளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் மட்டுமே வெளி வந்தது. இந்த நிலையில், சொகுசு விடுதியில் இருப்பது போன்று பல்வேறு வசதிகள் புழல் சிறையில் செய்து கொடுக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல்சிறையில் ஆய்வு செய்தார்.

 இந்த ஆய்வுக்குப் பிறகு ஏடிஜிபி அசுதோஷ் சக்லா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவையாகும் என்றார். இது தொடர்பாக நாங்கள் தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகத்தான், சிறையில் இருந்த செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார். இந்த விவகாரத்தில், யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்போன் உள்ளிட்டவைகளை கொடுத்துள்ளது யார் யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாகவும் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா கூறினார்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!