விநாயகர் சதுர்த்தி... நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!!!

By vinoth kumarFirst Published Sep 13, 2018, 10:04 AM IST
Highlights

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கு சென்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் பல இடங்களில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மும்பை உள்பட நாட்டின் முக்கிய இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ளது. 

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை மாநகரில் 2520 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பெரு நகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 3 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனனர்.

  

அதேபோல், அனுதிக்கப்பட்ட வழித்தடங்களில் சென்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் திருவெற்றியூர், எண்ணூர் ஆகிய 5 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்டுள்ள இடங்களில் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

click me!