உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை... வெளிவந்த பகீர் புகைப்படங்கள்!

By vinoth kumar  |  First Published Sep 13, 2018, 1:29 PM IST

புழல் சிறைவளாகத்தில் கைதிகள் உல்லாசமாக இருப்பது போன்றும், கூலிங்கிளாஸ் அணிந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி-சர்ட், அரைக்கால் சட்டை, கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் புழல் சிறைக்குள் கைதிகள் போஸ் கொடுத்துள்ளனர். 


புழல் சிறைவளாகத்தில் கைதிகள் உல்லாசமாக இருப்பது போன்றும், கூலிங்கிளாஸ் அணிந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி-சர்ட், அரைக்கால் சட்டை, கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் புழல் சிறைக்குள் கைதிகள் போஸ் கொடுத்துள்ளனர். செல்போன் மூலமும் கைதிகள் செல்பி எடுக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 

கைதி ஒருவர், தோட்டத்தில் உற்சாகமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுப்பதும், இன்னொருவர் ஹாயாக நடந்து செல்வதும், ஜிப்பா அணிந்தபடி கைகளை நீட்டிக் கொண்டு கைதி ஒருவர் போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சிறைக்சாலைகளுக்குள், டிபன்பாக்ஸ்களும், விதவிதமான உணவு வகைகளும் இருக்கும் படங்களும் வெளியாகி உள்ளன. 

Tap to resize

Latest Videos

எலக்ட்ரிக் குக்கள்கள் கொண்டு சிறைக்குள்ளேயே உணவு வகைகள் சமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சிறை கைதிகளில் சிலர், செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போன் செய்து பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.சிறையில் கைதிகள் உல்லாசமாக இருப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர்? இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது குறித்து சிறையில் கைதிகள் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது யார்? கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

click me!