வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து வழக்கு – உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி...

 
Published : Jun 14, 2017, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து வழக்கு – உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி...

சுருக்கம்

Vadapalani apartment fire case - Owner Bail has been dismissed

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட வழக்கில் உரிமையாளர் விஜயகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றி அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதிகாலை என்பதால் வீட்டில் இருந்தவர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால், அவர்களை வெளியேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அங்கு இருந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுதிணறல் காரணமாகவே நான்கு பேரும் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

இதைதொடர்ந்து விஜயகுமார் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!