தமிழக மருத்துவத்துறையில் உள்ள 1,021 காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்... அமைச்சர் மா.சு உறுதி!!

By Narendran S  |  First Published Mar 26, 2023, 5:33 PM IST

தமிழக மருத்துவத்துறையில் காலியிடங்களுக்கு முதல்வரின் அறிவுறுத்தலை பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 


தமிழக மருத்துவத்துறையில் காலியிடங்களுக்கு முதல்வரின் அறிவுறுத்தலை பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவத்துறையில் 1,021 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்!!

Tap to resize

Latest Videos

அதன்படி, ஆயிரத்து 21 மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான தேர்வு வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதேபோன்று, 986 மருந்தாளுநர் பணிக்கான தேர்வும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.4000 லஞ்சம்... வசமாக சிக்கிய காவல் உதவி ஆய்வாளர்!!

மருத்துவ துறையில் இருக்கும் காலியிடங்கள் முதல்வரின் அறிவுறுத்தலை பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 14,13,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும் சுகாதார பணியாளர்கள் 10,000 பேருக்கு இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

click me!