தமிழக பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு: சென்னை டூ கன்னியாகுமரி வரையில் மிதிவண்டி பயணம்!

Published : Mar 26, 2023, 03:42 PM IST
தமிழக பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு: சென்னை டூ கன்னியாகுமரி வரையில் மிதிவண்டி பயணம்!

சுருக்கம்

தமிழக காவல் பணியில்  பெண் காவலர்கள்  50வது வருடம்  சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் மிதிவண்டி பயணத்தை முதல்வர் மு.கஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்லையில் அவர்களுக்கு உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது.  

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் கடந்த 1973ம்  வருடம் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் பெண் காவலர்கள் பங்கேற்கும் தொடர் மிதிவண்டி பேரணி கடந்த 17ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி திருவிழா; சுவாமி மீது வெண்ணை வீசி வழிபாடு!

110 பெண் காவலர்கள் பங்குபெற்ற இந்த தொடர் மிதிவண்டி பயணம் சென்னை, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை விருதுநகர் வழியாக தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி வருகை புரிந்த காவலர்களை தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட சரக காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உலக வாய் சுகாதார தினம்: மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு!

அதன் தொடர்ச்சியாக  பெண் காவலர்கள் பங்குபெற்று கன்னியாகுமரி வரை செல்லும் தொடர்  மிதிவண்டி பயணத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று கொடியசைத்து துவங்கிவைத்தனர். இந்த தொடர் மிதிவண்டி பயணமானது  திருநெல்வேலி, வழியாக வருகின்ற வரும் 27ம் தேதி கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் தலைமறைவு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!