சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
துணைவேந்தர் தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிடுள்ளது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யக் தேடுதல் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
undefined
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். துணைவேந்தர் நியமனத்திற்கு கவர்னர் ஏற்கனவே தேடுதல் குழு அமைத்த நிலையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது. யுஜிசி பிரதிநிதியை நிராகரித்து தமிழக அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு கவர்னர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் ஏற்படுமோ என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது.
ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே