தமிழகத்திற்கு தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றாத கர்நாடகா அரசை பிரதமர் மோடி கலைக்க வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த 48 நாட்களாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு விவசாய விலை பொருட்களுக்கு இரட்டிப்பான விலை தருவதாக அறிவித்ததை வழங்க வலியுறுத்தியும், மாநில அரசு வழங்குவதாக அறிவித்த விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை வழங்க வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 49ம் நாளான இன்று தேங்காய்க்கு உரிய விலை இல்லை. இதனால் தேங்காய் அனைத்தும் காய்ந்து போய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை வெளிப்படுத்தும் வகையில் காய்ந்த தேங்காய்யை வைத்து பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த நபரை நிற்க வைத்து அவரின் காலில் விவசாயிகள் விழுந்து காப்பாற்று.. காப்பாற்று.. தேங்காய்க்கு உரிய விலை வழங்கு என கோஷமிட்டு நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஒரு மாதத்திற்கு எந்த பணியும் செய்யக் கூடாது; மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு அமைச்சர் கட்டளை
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு, பிரதமர் மோடி விவசாய விலைப் பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் விலை தரப்படும் என தெரிவித்தார். மேலும் நெல்லுக்கு 54 ரூபாய் தருவேன் என கூறிவிட்டு தற்போது இருபது ரூபாய் வழங்குகிறார். கரும்புக்கு 8000 வழங்குவதாத கூறி 3000 ரூபாய் கொடுக்கிறார். இது நியாயமா? உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கூறி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டும் அவர்கள் தண்ணீர் தரமறுக்கிறார்கள். அந்த உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு மோடி கையில் இருக்கிறது. அவரும் தண்ணீர் விட கூறுவதில்லை.
30 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்வது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது தேங்காய் விளையும் குறைந்து விட்டது. எனவே விவசாயிகளை எலிக்கறி, பாம்புக் கறி திங்க விடாதீர்கள் என மோடி ஐயாவிடம் காப்பாற்றக் கோரி போராட்டம் நடத்தியுள்ளோம்.
அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள சலசலப்பு சரி செய்யப்படும் - வானதி சீனிவாசன்
உச்சநீதிமன்றம் சொன்னதை நிறைவேற்ற வேண்டிய கடமை மோடிக்கு உண்டு. அரசியல் அமைப்புச் சட்டம் அதை தான் சொல்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல உண்ணாவிரதம் இருக்கலாம் அல்லது மோடியைப் பார்த்து கேட்கலாம் என தெரிவித்தார்.