திருச்சியில் பரபரப்பு; அண்ணாசிலை மீது வெண்டைக்காய் வீச்சு; விவசாயிகள், காவல்துறையினர் தள்ளுமுள்ளு!!

By Velmurugan sFirst Published Sep 4, 2023, 2:21 PM IST
Highlights

திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு.

திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் 39வது நாளான இன்று வெண்டைக்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வெண்டைக்காய் மாலை அணிவிக்க முயற்சி செய்தனர். இதனால், காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலைகளில் வெண்டைக்காயை கொட்டி விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் அண்ணா சிலையின் மீது விவசாயிகள் வெண்டைக்காயை தூக்கி எறிந்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். 

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அய்யாகண்ணு கூறுகையில், ''நாங்கள் எங்களது கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் வெண்டக்காயின் விலையும் வீழ்ச்சி அடைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தும் வகையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம்  காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தள்ளு முள்ளு நடத்தினர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். 

அணை பகுதிகளில் தொடர் மழை; முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

எங்களுடைய கோரிக்கையை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மாநில, மத்திய அரசுகள் விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்'' என்றார். விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!