மயிலாடுதுறை - திருச்சி - சேலம் புதிய விரைவு ரயில் சேவை இன்று முதல் துவக்கம்; பயணிகள் உற்சாகம்

By Velmurugan s  |  First Published Aug 28, 2023, 6:55 PM IST

மயிலாடுதுறை - திருச்சி - சேலம் இடையே இன்று முதல் புதிய விரைவு ரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில் பயணிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி விரைவு ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த புதிய ரயிலை பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் இன்ஜின் முன்புறம் மாலை அணிவித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார். முன்னதாக ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

அப்பழுக்கற்ற பிரதமர் மோடியை குறை சொல்ல திமுகவிற்கு உரிமை இல்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்

இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு கேட்பதா? திமுகவுக்கு சீமான் கேள்வி

சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரயில் இதன் பின்னர் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!