தஞ்சையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோட் ஷோ; கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

By Velmurugan s  |  First Published Apr 12, 2024, 6:30 PM IST

தஞ்சை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகன பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தஞ்சை தொகுதியில் பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். 

தமிழகத்தில் இனி உதயசூரியன் உதிக்கக்கூடாது; ஓசூரில் நிர்மலா சீதாராமன் பேச்சு

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

மயிலாடுதுறை டூ அரியலூர்; சிறுத்தையின் அட்ராசிட்டியால் அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை மூல அனுமார் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தெற்கு வீதியில் நிறைவு பெறுகிறது. இந்த பேரணியில் ஏராளமான பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நிர்மலா சீதாராமன் ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திமுக அரசை கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!