தமிழகத்தில் இனி உதயசூரியன் உதிக்கக்கூடாது; ஓசூரில் நிர்மலா சீதாராமன் பேச்சு

By Velmurugan sFirst Published Apr 12, 2024, 5:51 PM IST
Highlights

போதை பொருள்களால் இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்து, அதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என ஓசூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். மேடையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 10 ஆண்டுகளாக ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நாட்டில் முதல் முறையாக ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் கொண்டு வந்தது அதில் ஓசூர் ஒரு முக்கிய இடமாக வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமரால் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு ராணுவ தளவாட உற்பத்தி மையம் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் வந்த காரணத்தினால் தற்போது ராணுவ தளவாட பொருள்கள் ஏற்றுமதி செய்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நாம் சம்பாதித்து உள்ளோம். அந்த 20 ஆயிரம் கோடி ரூபாயில் பெரும் பங்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து தான் வந்துள்ளது. 

மயிலாடுதுறை டூ அரியலூர்; சிறுத்தையின் அட்ராசிட்டியால் அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

அவர்கள் மழைக்காலத்திலும், குளிர் காலத்திலும் வரும் பறவை போல வந்து செல்கிறார் என தமிழக முதல்வர் கூறுகிறார். இது தவறான வார்த்தைகள். நாட்டில் உள்ள யாரும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் ஒரு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரை குற்றம் சொல்லும் நிலைமையில் தமிழக முதல்வர் உள்ளார். தமிழ்நாட்டுக்கு மோடி வரும்போது கருப்பு கொடி காட்டி திரும்பி போக வேண்டும் என்று கூறுகின்ற அவர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல தொழில்கள் நடக்கும்போது அவர்கள் கலெக்ஷனில் ஈடுபடுகின்றனர். 

தமிழ்நாட்டில் சாராய குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என நாம் அனைவருக்கும் தெரியும். அந்த குடிப்பழக்கத்தில் நமது மக்கள் அடிமையாகாமல் அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கி குடும்பத்தை காப்பாற்றக்கூடிய செயல்களில் நாம் ஈடுபட வேண்டும் என காத்து கொண்டிருக்கிறோம். அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ வேண்டும் என்பதற்காக போதை பொருள்களை இறக்குமதி செய்து இளைஞர்களுடைய வாழ்க்கையை பாழாக்கி வரும் அந்த குடும்பத்தை திரும்ப ஒருமுறை கூட தேர்ந்தெடுக்க கூடாது. போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அந்த குடும்பத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

என்னை கண்டால் பிரதமர் மோடி பயப்படுவார்; பிரசாரத்தில் ஆ.ராசா பரபரப்பு பேச்சு

போதை பொருள்கள் மூலமாக கோடி கோடியாக சம்பாதித்து தங்களுடைய குடும்பம் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். போதை மூலமாக வரக்கூடிய ஆதாயத்தால் பிழைக்கக் கூடிய எந்த குடும்பமும் வாழ்ந்ததில்லை, பிறரின் வாழ்க்கையை கெடுத்து, இளைஞர்களின் வாழ்க்கையை கெடுத்து, அதன் மூலமாக வரக்கூடிய ஆதாயங்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் இங்குள்ள எந்த குடும்பத்திற்கு வேண்டாம் அதனை வைத்து அரசியல் செய்யக்கூடிய அந்த குடும்பத்தை நாம் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

click me!