PMK vs BJP:கண்டுகொள்ளாத பாஜக..கோவை பிரச்சாரத்தில் இருந்து மன வருத்தத்தோடு வெளியேறுகிறோம்-பாமக திடீர் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Apr 12, 2024, 4:20 PM IST

வேட்பாளர் அறிமுக கூட்டம், வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என அந்த நிகழ்ச்சிக்கும் பாமகவிற்கு அழைப்பு விடுக்கவில்லையென தெரிவித்துள்ள கோவை மாவட்ட பாமக செயலாளர் ராஜ், கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். 


பாமக- பாஜக கூட்டணி மோதல்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடுகிறது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் பிரச்சாரம். வேட்புமனு தாக்கல், தேர்தல் அறிக்கை என எந்தவித நிகழ்ச்சிக்கும் பாமகவை பாஜக மாநிலை தலைமையோ. வேட்பாளரோ அழைக்கவில்லையென கோவை மாவட்ட பாமக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை பாமக தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுகிறோம் என தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் பட்டியிட்டுள்ளார், அதில், 

Latest Videos

undefined

பிரச்சாரத்தில் வெளியேற காரணங்கள்

1. வேட்பாளர்  பாமக அலுவலகத்துக்கு வரவில்லை.
2. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாமகவை அழைக்கவில்லை. 6 தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது.
3. வேட்பு மனு தாக்கலுக்கு பாமகவை அழைக்கவில்லை.
4. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு க்கு பாமகவை அழைக்கவில்லை.
5. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைக்கவில்லை.

சுயமரியாதை முக்கியம்

6. தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பாமகவுக்கு அழைப்பில்லை.
7. கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம்.
8. கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை,ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர்.
9. கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்.

இதையும் படியுங்கள்

Loksabha Election : காமராஜர் பெயரில் உணவு வங்கி முதல்.. நவோதயா பள்ளிகள் வரை - பாஜகவின் தேர்தல் அறிக்கை இதோ!
      

click me!