சென்னை: தமது தொகுதியில் வீடு, வீடாக கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை கொண்டு வந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: தமது தொகுதியில் வீடு, வீடாக கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை கொண்டு வந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
undefined
நாடு முழுவதும் இன்னமும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு போராடி வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
தற்போது கொரோனா பாதிப்புகள் 20 ஆயிரத்துக்கு கீழே பதிவாகி இருந்தாலும் அது மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. 35 ஆயிரம் என்ற அளவுக்கு இருந்த தினசரி பாதிப்புகள் இப்போது 2 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கியமாக வாரம்தோறும் ஞாயிறன்று மெகா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி லட்சக்கணக்ககான மக்களுக்கு தடுப்பூசியை போட்டு இருக்கிறது.
இந் நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி விஷயத்தில் செய்த காரியம் மக்களை சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறது. அவரது ஏற்பாட்டின் படி தொகுதியில் உள்ள மக்களுக்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
கையில் ஒலிபெருக்கியுடன் கொரோனா தடுப்பூசிகளுடன் தெரு, தெருவாக செல்லும் சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி வெளியிட்டு உள்ளார். அவரது இந்த சூப்பர் நடவடிக்கைக்கு தொகுதி மக்கள் பலத்த வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.