1-ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு… மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எப்போது?

Published : Sep 28, 2021, 09:24 PM IST
1-ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு… மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எப்போது?

சுருக்கம்

கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்கள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிகளில் அன்மையில் நேரடி வகுப்புகள் தொடங்கின. அந்தவகையில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பள்ளிகள் திறக்கப்பட்டதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே 1 முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று அனைத்து தரப்பினரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து அவரும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், நேரடி வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கூடுதல் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது.  

இந்தநிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசு அறிவித்துள்ளது.  மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!
Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!