6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது…? இன்று மாலை அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..!

By manimegalai aFirst Published Sep 28, 2021, 1:31 PM IST
Highlights

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்புக்கு பின்னர் மாணவ, மாணைவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுகுறித்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்புக்கு பின்னர் மாணவ, மாணைவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுகுறித்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் நேரடியாக வகுப்புகளுக்கு வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே 1 முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று அனைத்து தரப்பினரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து அவரும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், நேரடி வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கூடுதல் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலையில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!