பெரும்பாலான கொரோனா தொற்றுகள் இதனால் தான் பரவுகிறது... சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 26, 2021, 3:37 PM IST
Highlights

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள்தான். முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முக்கியம். 

கொரோனாவால் முதியவர்களின் இறப்பு அதிகரித்துள்ளது. எனவே முதியவர்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. பெரும்பாலான தொற்றுகள் குடும்ப நிகழ்வுகள் மூலம் பரவுகிறது. குறிப்பாக அரியலூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளால் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் பொழுது போக்கு இடங்களாக உள்ள நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் நாகை, விருதுநகர், மாவட்டங்களிலும் தொற்று அதிகளவில் உள்ளது.

கொரோனாவின் முதல் இரண்டு அலைகளில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள்தான். முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முக்கியம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை. அதனால் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்பது தவறு. வெளியே சென்று வீடு திரும்புபவர்களால் அவர்களுக்குத் தொற்று ஏற்படும். 

வீடு தேடி முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது சென்னையில் உள்ளது. பிற பகுதிகளில் வீடுகளுக்கு அருகில் முகாம் அமைத்து முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது. சிகிச்சைக்கு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.

click me!