அசாமில் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… பா.ஜ.க. அரசைக் கண்டித்து சென்னையில் த.ம.மு.க. ஆர்ப்பாட்டம்…!

By manimegalai aFirst Published Sep 26, 2021, 12:01 PM IST
Highlights

அசாமில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கச் செல்லும் போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

அசாமில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கச் செல்லும் போது ஏற்பட்ட மோதலில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்கும் புதிய திட்டத்தை அம்மாநில பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக இரு தினங்களுக்கு முன்னர் சிபாஜ்ஹார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றபோது அங்குள்ள மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களில் இருவர் உயிரிழந்தனர்.

அசாம் அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. நிலம் மீட்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக்வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், அசாம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து சென்னை பல்லாவரத்தில் தமிழ்நாடு மூஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப், மாவட்ட தலைவர் ஜாக்கீர் உஷேன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசாம் மாநில அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

click me!