தமிழ்நாடு முழுவதும் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்….. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...

By manimegalai aFirst Published Sep 26, 2021, 12:14 PM IST
Highlights

தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகள், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று மூன்றாவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் என பலரும் களத்தில் இறங்கி தடுப்பூசி போடும் பணிகளை கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையின் சார்பில் தடுப்பூசி செலுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் தகவல் கேட்டறிந்தார். இதையடுத்து, பட்டாளத்தில் திருமண மண்டபம், உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் கொளத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம், அயனாவரத்தில் உள்ள பள்ளி முகாம் என ஐந்து இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் இரவு ஏழு மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 15 லட்சம் டோஸ்களை செலுத்த மக்கள் நல்வாழ்வு துறை திட்டமிட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!