தண்டவாளத்தில் தூங்கிய ‘கும்பகர்ணன்’… ரயில் ஏறிய அடுத்த நிமிஷம்.. நிகழ்ந்த அதிசயம்…

Published : Sep 28, 2021, 09:10 PM IST
தண்டவாளத்தில் தூங்கிய ‘கும்பகர்ணன்’… ரயில் ஏறிய அடுத்த நிமிஷம்.. நிகழ்ந்த அதிசயம்…

சுருக்கம்

கோவையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது ரயில் ஏறிய சம்பவத்தில் பெரும் அதிசயம் நடந்திருக்கிறது.

கோவை:  கோவையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது ரயில் ஏறிய சம்பவத்தில் பெரும் அதிசயம் நடந்திருக்கிறது.

பொதுவாக ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது மிகுந்த கவனம் தேவை. இல்லை எனில் எங்கிருந்தோ வரும் ரயில் எமனாக மாறும் சம்பவங்கள் அரங்கேறும். அப்படி நடந்த சம்பவங்களும் உண்டு.

இந் நிலையில், கோவையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது ரயில் ஏறியும் அவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்திருக்கிறது. கோவை, மேட்டுப்பாளையம் இடையே ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கம் போல் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்து கொண்டு இருந்தது.

துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருந்திருக்கிறார். ரயில் பாதையில் அவர் படுத்திருப்பதை கண்ட ஓட்டுநர் ஹார்ன் அடிக்க.. அவர் அசையவில்லை.

தூங்கியவரின் மீதே ஏறிய ரயில் சிறிது தூரம் போய் நின்றிருக்கிறது. உடனடியாக அங்கிருந்தவர்களும், பயணிகளும் சென்று அந்த நபருக்கு என்ன ஆச்சோ என்று பதறியபடி ஓடி இருக்கின்றனர். ஆனாலும், அந்த நபர் அசைந்தபாடில்லை.

ஒரு வழியாக அந்த நபர் முழித்த போது தான் தெரிந்திருக்கிறது முழு போதையில் அவர் தூங்கி இருக்கிறார் என்பது. கடுப்பில் இருந்த அனைவரும் அந்த ஆசாமியை வேறு பக்கம் உருட்டி தள்ளினர். ரயில் ஏறியும், சிறு காயமோ, சின்ன கீறலோ இல்லாமல் உயிர் பிழைத்திருக்கிறார் இந்த அதிசய நபர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தும் விஜய்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..